பொலிஸ்மா அதிபரின் நியமனத்தை அடிப்படையாகக் கொண்டு அரசியலமைப்பு பேரவை மற்றும் ஜனாதிபதியின் அதிகாரங்கள் தொடர்பில் விடயங்களை தெளிவுபடுத்தி ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் ஊடக அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது. ‘ஜனாதிபதி மற்றும் அரசியலமைப்பு பேரவையின் அரசியலமைப்பு ரீதியான பொறுப்பை நிறைவேற்றுதல்’ என்ற தலைப்பில் இந்த ஊடக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் மூலம் நிறுவப்பட்ட பாராளுமன்றத்தில் சபாநாயகர் தலைமையிலான அரசியலமைப்பு பேரவை நிறைவேற்று அதிகாரத்தின் ஒரு பகுதியாக செயற்படுவதாகவும், ஜனாதிபதி அரசியலமைப்பிற்கு அமைவான பணிகளை முன்னெடுப்பதற்கான ஒத்துழைப்பையும் அரசியலமைப்புப் பேரவை வழங்குவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more
நாளை (02) காலை 09 மணிக்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு சென்று வாக்குமூலம் வழங்க வேண்டுமென அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு மாளிகாகந்த நீதவான் லோச்சனா அபேவிக்ரம இன்று உத்தரவிட்டுள்ளார். போலி Human Immunoglobulin கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரியாகம விடுத்த கோரிக்கையை கருத்திற்கொண்டு நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.