Header image alt text

துயர் பகிர்வோம்!

Posted by plotenewseditor on 2 February 2024
Posted in செய்திகள் 

கழகத் தோழர் பாலா (UK) அவர்களின் சகோதரர் சங்கரப்பிள்ளை பாலச்சந்திரன் அவர்கள் 27.01.2024 அன்று இலண்டனில் காலமானார். அவரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களோடு நாமும் இப் பெருந்துயரினை பகிர்ந்து கொண்டு அன்னாருக்கு எமது இதயபூர்வ அஞ்சலியையும் சமர்ப்பிக்கின்றோம்.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(DPLF)

Read more

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம்  இன்று குற்றவியல் விசாரணை திணைக்களத்தினர் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். சர்ச்சைக்குரிய Human Immunoglobulin மருந்து கொடுக்கல் வாங்கல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு அவர் இன்று முற்பகல் சென்றிருந்தார்.   சர்ச்சைக்குரிய மருந்து கொடுக்கல் வாங்கல் தொடர்பில் குற்றவியல் விசாரணை திணைக்களத்திடம் வாக்குமூலம் வழங்குமாறு முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு மாளிகாகந்த நீதவான் லோச்சனா அபேவிக்ரம நேற்று உத்தரவிட்டிருந்தார். Read more

நிகழ்நிலை காப்பு சட்டமூலம், பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் FORUM-ASIA அமைப்பு அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளது. இந்த அமைப்பு 23 நாடுகளில் செயற்படும் 85 ஆசிய நாடுகளின் உறுப்பினர்களைக் கொண்ட ஒரு பிராந்திய மனித உரிமைகள் அமைப்பாகும். சம்பந்தப்பட்ட சட்டமும் சட்டமூலமும் நாட்டு மக்களின் மனித உரிமைகளுக்கும் சுதந்திரத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என அவ்வமைப்பு கூறியுள்ளது. பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் உள்ள பயங்கரவாதத்தின் பரந்த வரையறை, வரையறுக்கப்பட்ட நீதித்துறை மேற்பார்வை, மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்குள்ள வரம்புகள் FORUM-ASIA-வின் கரிசனையை ஈர்த்துள்ளன. Read more