76 ஆவது சுதந்திர தின தேசிய நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்துகொண்ட தாய்லாந்து பிரதமர் Srettha Thavisin நாடு திரும்பியுள்ளார். இரண்டு நாட்கள் விஜயம் மேற்கொண்டு தாய்லாந்து பிரதமர் நேற்று நாட்டிற்கு வருகை தந்தார். தாய்லாந்து பிரதமரின் இலங்கை வருகையை முன்னிட்டு இலங்கை – தாய்லாந்து சுதந்திர வர்த்தக உடன்படிக்கை உள்ளிட்ட 3 உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன.