உயர் நீதிமன்றம் பரிந்துரைத்த பல திருத்தங்களை கவனத்திற்கொள்ளாமல் நிகழ்நிலை காப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டமை தொடர்பில் Transparency International Sri Lanka நிறுவனம் அதிருப்தி வௌியிட்டுள்ளது. இது அரசாங்கம், பாராளுமன்றம், சட்டமா அதிபர், சபாநாயகரின் சட்டத்திற்கு முரணான செயற்பாடாகும் என அந்த நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையின் அரசியலமைப்பிற்கு முரணாக ஏதேனும் சட்டமொன்றை கொண்டுவருவதற்கு பாராளுமன்றம் முயற்சிக்கும் போது அதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடுவதற்கு பிரஜைகளுக்கு அரசியலமைப்பின் ஊடாக வழங்கப்பட்டுள்ள உரிமை இதன்மூலம் பாரதூரமாக மீறப்பட்டுள்ளதாக Transparency International Sri Lanka நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. Read more
தோழர் சிவபாலன் (UK) அவர்களது பேரன் செல்வன் அயன் அவர்களின் இரண்டாவது பிறந்தநாளை முன்னிட்டு முல்லைத்தீவு மாங்குளம் நல்லாயன் சிறுவர் இல்லப் பிள்ளைகளுக்கு இன்று விசேட உணவு வழங்கிவைக்கப்பட்டது. நிகழ்வில் கட்சியின் இளைஞர் பிரிவு பொறுப்பாளர் யூட்சன், கட்சியின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் கலைஞர் தவராஜா, கட்சியின் முள்ளியவளை மேற்கு வட்டார இணைப்பாளர் சஞ்ஜீவன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள்.
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க உள்ளிட்ட தூதுக்குழுவினர் மற்றும் இந்திய வௌியுறவுத்துறை அமைச்சர், கலாநிதி S.ஜெய்ஷங்கர் ஆகியோருக்கு இடையே இன்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க தலைமையிலான குழுவினர் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர். இந்திய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் அவர்கள் இந்த விஜயத்தில் ஈடுபட்டுள்ளனர். அனுர குமார திசாநாயக்கவுடன், கட்சியின் செயலாளர் நிஹால் அபேசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், தேசிய செயற்குழு உறுப்பினர் அனில் ஜயந்த ஆகியோர் இந்த விஜயத்தில் இணைந்துள்ளனர்.
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் நேற்றிரவு மோதலில் ஈடுபட்ட 34 கைதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் 8 பேர் காயமடைந்துள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம், ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் வெலிகந்த ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக பொலன்னறுவை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதற்கு முன்னரும் பல தடவைகள் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் உள்ள கைதிகளுக்கு இடையில் பல தடவைகள் மோதல் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.