ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்த வாரம் அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்து சமுத்திர மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் அங்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு தெரிவித்தார். குறித்த மாநாடு அவுஸ்திரேலியாவின் தலைநகர் பேர்த்தில் இந்த மாதம் 9ஆம் மற்றும் 10ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. குறித்த மாநாட்டில் ஜனாதிபதி முக்கிய உரையொன்றையும் நிகழ்த்த உள்ளார். Read more
கெஹலிய ரம்புக்வெல்ல சுற்றாடல் அமைச்சர் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார். அவர் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பியதாகவும், அதனை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டதாகவும் ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. அதனை வர்த்தமானியில் வௌியிட அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் செயலகம் குறிப்பிட்டுள்ளது.
இந்த வருடத்தில் ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் நடத்தப்படவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார். ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய செலவினங்களை, 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் தேர்தலுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 10 பில்லியன் ரூபாவில் முகாமைத்துவம் செய்ய வேண்டியுள்ளமை தொடர்பில் அமைச்சரவை கவனம் செலுத்தியுள்ளது.
வைத்தியர் பற்றாக்குறைக்கு தீர்வாக எதிர்வரும் மார்ச் மாதம் அரச வைத்தியசாலைகளுக்கு மேலும் 1300 வைத்தியர்கள் நியமிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அவர்கள் தற்போது பயிற்சி நிறைவடையும் நிலையில் உள்ளதாக சுகாதார செயலாளர், விசேட வைத்தியர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டும் பயிற்சி முடித்த 590 வைத்தியர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டது. இதுவரை காலமும் வெற்றிடமாக இருந்த அரச வைத்தியசாலைகளுக்கே இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக செயலாளர் குறிப்பிட்டார்.