Posted by plotenewseditor on 7 February 2024
Posted in செய்திகள்
மாடி வீடுகளில் குடியிருக்கும் குறைந்த வருமானம் பெறும் 50,000 குடும்பங்களுக்கு வாடகை அறவிடுவதை இடைநிறுத்தி, அந்த வீடுகளின் உரித்துரிமையை அவர்களுக்கே வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வாடகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள மாடி வீடுகளுக்கு, அந்த கட்டணம் அறவிடப்படுவதை இடைநிறுத்தி, அதற்கான உரிமையை அவர்களுக்கே வழங்க 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது. Read more