Posted by plotenewseditor on 9 February 2024
Posted in செய்திகள்
நிகழ்நிலை காப்பு சட்டத்தின் சில பிரிவுகள் உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்துடன் இணங்கவில்லை என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சபாநாயகருக்கு அறிவித்துள்ளது. இந்த குறைபாடுகள் தொடர்பில் தாம் மிகுந்த கவலையடைவதாக மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் L.T.B. தெஹிதெனியவின் கையொப்பத்துடன் சபாநாயகருக்கு அனுப்பப்பட்டுள்ள இந்த கடிதத்தின் பிரதிகள், ஜனாதிபதி, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் சட்ட மா அதிபருக்கும் அனுப்பப்பட்டுள்ளன. Read more