கழகத்தின் முன்னைநாள் மட்டு அம்பாறை திருமலை பிராந்திய பொறுப்பாளர் தோழர் G. T. R. அவர்களின் 50,000/- நிதிப்பங்களிப்புடன் வெள்ள நிவாரணம் வழங்கி வைக்கப்பட்டது. இதன்படி வவுணதீவு பிரதேசத்தில் புதுமண்டபத்தடி, கரையாக்கன்தீவு, நடராசானந்தபுரம், இருட்டுச்சோலைமடு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 25 குடும்பங்களுக்கு தலா 2,000/- ரூபா பெறுமதியான உலருணவுப் பொதிகள் கட்சியின் துணைத்தலைவர் பொன். செல்லத்துரை அவர்களால் இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளன.