இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் நிலத் தொடர்பை ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் ஆய்வுகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் நேற்று (09) தெரிவித்தார். இதன் மூலம் கொழும்பு மற்றும் திருகோணமலை துறைமுகங்களை பொருட்கள் பரிமாற்ற மத்திய நிலையமாக மாற்றியமைக்க முடியும் என இந்து சமுத்திர மாநாட்டில் ஜனாதிபதி தெரிவித்தார். ஏழாவது இந்து சமுத்திர மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்ஷங்கர், அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜெனி வோன் மற்றும் சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.