கட்டார் நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த எட்டு முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஏழு பேர் நாடு திரும்பியுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு இன்றைய தினம் தெரிவித்துள்ளது. கத்தாரில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிந்ததாக கூறப்படும் குறித்த சந்தேகநபர்கள் மீதான குற்றச்சாட்டுகளை கட்டாரோ அல்லது இந்தியாவோ வெளியிடவில்லை. எனினும் இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. Read more
72 சுகாதார தொழிற்சங்கங்கள் நாளை காலை 6 மணிமுதல் மீண்டும் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. வைத்தியர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள 35,000 ரூபாய் மேலதிக கொடுப்பனவு, தமக்கும் வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தி 72 சுகாதார தொழிற்சங்கங்கள் பல தடவைகளில் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தன. இந்த விடயம் தொடர்பில் நிதியமைச்சின் அதிகாரிகளுக்கும், சுகாதார தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்றைய தினம் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இடம்பெற்றது.
இணையவழி பாதுகாப்பு சட்டத்தின் சில சரத்துக்களில் திருத்தம் மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இன்று நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் குறித்த சட்டம் தொடர்பான திருத்தங்கள் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்பட்ட ஆட்சேபனைகளுக்கு மத்தியில் இந்த சரத்துகளில் திருத்தம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் குறித்த திருத்தங்கள் இன்றைய தினம் ஏற்றுக் கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.