யாழ்ப்பாணம் – சுன்னாகம் – இணுவில் பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பேர் உயிரிழந்தனர். குறித்த பகுதியில் தொடருந்து ஒன்றுடன் வேன் ஒன்று மோதியே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. சம்பவத்தில் 32 வயதான தந்தையும் 6 மாத மகளும் உயிரிழந்துள்ளதாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்த தாய் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். சம்பவம் தொடர்பான விசாரணைகளை சுன்னாகம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
தமி்ழ்த்தேசியப் பற்றாளரும், சமூக மற்றும் சமயத் தொண்டருமாகிய இந்திரகுமார் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்ப உறவுகள் மற்றும் நண்பர்களோடு நாமும் இப்பெரும் துயரினைப் பகிர்ந்து கொள்வதோடு அன்னார்க்கு எமது இதயபூர்வ அஞ்சலியையும் சமர்ப்பிக்கிறோம்.