எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவளிக்க போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். பல்வேறு வேட்பாளர்களை ஆதரிக்க தீர்மானிக்கவுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என்றும் அவர் அறிக்கையொன்றை வெளியிட்டு சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், ஐக்கிய மக்கள் முன்னணியின் தலைமைப் பொறுப்பை ஏற்க தயாராக இருப்பதாக வெளியான செய்திகளும் உண்மைக்கு புறம்பானவை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்
எதிர்வரும் 19ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த இலங்கை தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டிற்கு இருவேறு நீதிமன்றங்கள் இன்று இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்துள்ளன. கடந்த 21 மற்றும் 27 ஆம் திகதிகளில் நடைபெற்ற கட்சியின் பொதுச் சபை கூட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட தெரிவுகளில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாகவும், அந்த தீர்மானங்களை ரத்து செய்து உத்தரவிடக்கோரியும் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. குறித்த மனுவை திருகோணமலை சாம்பல்தீவு – கோணேஷபுரியைச் சேர்ந்த சந்திரசேகரம் பரா என்பவர் தாக்கல் செய்திருந்தார்.