Posted by plotenewseditor on 16 February 2024
Posted in செய்திகள்
தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சிறுமி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. குறித்த சிறுமி நேற்று மாலை காணாமற்போயுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, பிரதேச மக்கள் தேடுதலில் ஈடுபட்ட போது, தென்னந்தோட்டத்தில் இருந்து இன்று காலை சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சிறுமியின் தாயும் தந்தையும் புத்தளம் – பூக்குளம் கிராமத்தில் வசித்து வருவதுடன், பாடசாலை செல்வதற்காக சிறுமியும் அவரது இரு மூத்த சகோதரிகளும் சகோதரனுடன் ஊர்மனை கிராமத்திலுள்ள அம்மம்மாவின் வீட்டில் வசித்துவந்துள்ளமை தெரியவந்துள்ளது. Read more