கச்சதீவு திருவிழாவை புறக்கணிக்க தமிழக மீனவர்கள் தீர்மானித்துள்ளனர். தமிழக மீனவர்களை இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக கைது செய்கின்றமையை கண்டித்து மீனவர்களால் இன்று நடத்தப்பட்ட அவசர ஆலோசனைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், கைது செய்யப்படும் இந்திய மீனவர்களுக்கு சிறைத்தண்டனை விதிப்பதை கண்டித்து காலவரையறையற்ற போராட்டத்தை முன்னெடுப்பது தொடர்பிலும் ராமேஷ்வரம் மீனவர்கள் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர். Read more
நிகழ்நிலை காப்பு சட்டம் உள்ளிட்ட சட்டங்களுடன் தொடர்புடைய பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக அமெரிக்க செனட் சபையின் வௌியுறவு தொடர்புகள் குழுவின் சிரேஷ்ட தொழில்சார் பணிக்குழாமின் பிரதிநிதிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். நாட்டின் பொருளாதாரம் மற்றும் அரசியல் நிலைமைகள் தொடர்பில் ஆழமான தௌிவை பெற்றுக்கொள்வதற்காக இந்த பிரதிநிதிகள் குழு நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக, அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தனது X பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
கட்புலனற்றோர் வாக்களிக்க விசேட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேல்தல்களின் போது வாக்களிப்பு நிலையத்தில் கடமையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளின் உதவியுடனேயே தற்போது அவர்கள் வாக்களித்து வருவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் R.M.A.L. ரத்நாயக்க தெரிவித்தார். இந்த திட்டத்தின் கீழ் Braille முறையில் அச்சிடப்பட்ட கட்சிகளின் பெயர்கள் மற்றும் வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய காகிதம் அவர்களுக்கு வழங்கப்படவுள்ளது. இது தொடர்பான விசேட மாதிரி வேலைத்திட்டம் நேற்று நுவரெலியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.