Header image alt text

மக்கள் யுத்தத்தின் மகத்தான் தளபதி செயலதிபர் அமரர் தோழர் முகுந்தன் (க.உமாமகேஸ்வரன்) அவர்களின் 79ஆவது ஜனன தினம் இன்றாகும்…

நாட்டுக்கு வருகைத்தரும் சுற்றுலா கப்பல்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள் 50 சுற்றுலாக்கப்பல்கள் நாட்டுக்கு வருகைத்தரவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த கப்பல்கள் கொழும்பு, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை துறைமுகங்களில் நங்கூரமிடப்படும் எனவும் அந்த சபை தெரிவித்துள்ளது. இதேவேளை, சுற்றுலாத்துறை மூலம் இலங்கை 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டியுள்ளதாகவும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஈரானிய வௌிவிவகார அமைச்சர் ஹுசைன் அமீர் நாளை இலங்கைக்கு வருகைதரவுள்ளார். வௌிவிவகார அமைச்சர் அலி சப்ரியின் அழைப்பை ஏற்று அவர் இந்த விஜயத்தை மேற்கொள்வதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ஈரானிய வௌிவிவகார அமைச்சர் இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வௌிவிவகார அமைச்சரை சந்திக்கவுள்ளார். அவருடன் அந்நாட்டு ஜனாதிபதி அலுவலகத்தின் எரிசக்தி மற்றும் வௌிவிவகார அமைச்சுகளின் உயர்மட்ட அதிகாரிகளும் வருகைதரவுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. Read more

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு அமெரிக்காவின் பொது இராஜதந்திரத்திற்கான பிரதி இராஜாங்க செயலாளர் எலிசபெத் எம் எலன் நேற்று இலங்கை வந்துள்ளார். அவர் தமது விஜயத்தின்போது அரசாங்க அதிகாரிகள் ஊடகப் பிரதிநிதிகள் டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்குநர்கள் மற்றும் இளைஞர் தலைவர்களைச் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின்போது இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பங்காளித்துவம் இலங்கையின் தகவல் மற்றும் ஊடக வெளியைப் பாதுகாப்பது மற்றும் செழுமையை மேம்படுத்துவதற்கு ஒன்றிணைந்து செயல்படுவதற்கான வழிகள் குறித்து ஆராயப்படும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் குறிப்பிட்டுள்ளார். Read more