இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஈரானிய வௌிவிவகார அமைச்சர் ஹுசைன் அமீர் நாளை இலங்கைக்கு வருகைதரவுள்ளார். வௌிவிவகார அமைச்சர் அலி சப்ரியின் அழைப்பை ஏற்று அவர் இந்த விஜயத்தை மேற்கொள்வதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ஈரானிய வௌிவிவகார அமைச்சர் இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வௌிவிவகார அமைச்சரை சந்திக்கவுள்ளார். அவருடன் அந்நாட்டு ஜனாதிபதி அலுவலகத்தின் எரிசக்தி மற்றும் வௌிவிவகார அமைச்சுகளின் உயர்மட்ட அதிகாரிகளும் வருகைதரவுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த குழுவினர் எதிர்வரும் 21ஆம் திகதி நாட்டில் இருந்து புறப்பட்டுச் செல்லவுள்ளனர்.