Posted by plotenewseditor on 19 February 2024
Posted in செய்திகள்
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ஐக்கிய மக்கள் சக்தியில் வகிக்கும் பதவிகள் மற்றும் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்த தடை விதித்து கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த பின்னர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. 14 நாட்களுக்கு செல்லுபடியாகும் வகையில் இந்த இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, பொது செயலாளலர் ரஞ்சித் மத்தும பண்டார, தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க, பொருளாளர் ஹர்ஷ டி சில்வா ஆகியோர் இந்த மனுவின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.