ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும், ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் பணிப்பாளர் நாயகம் Qu Dongyu ஆகியோருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகபிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்குரோத்து நிலையில் இருந்து இலங்கையை மீட்டெடுத்து பொருளாதார மறுசீரமைப்புகளை மேற்கொள்வதற்கு ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகளுக்கு இதன்போது வாழ்த்து தெரிவித்தார்.

அத்துடன், உணவு மற்றும் விவசாய அமைப்பின் ஆதரவு இலங்கை அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் தொடர்ந்தும் வழங்கப்படும் என்றும் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் பணிப்பாளர் நாயகம் Qu Dongyu இதன்போது வலியுறுத்தியுள்ளார்.