18.02.2024 ஞாயிற்றுக்கிழமை காலை மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேசசபையின் வட்டக்கண்டலில் மிகப் பழைமை வாய்ந்த பிள்ளையார் ஆலயத்தின் அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு சுவிஸ் குறிச்சியில் வசிக்கும் திரு பார்த்தீபன் தம்பதியினரின் செல்வப்புதல்வர்கள் பார்த்தீபன் ஆதிசன் பார்த்தீபன் ஆகிசன் ஆகியோரின் பிறந்ததின வைபவம் நடைபெற்றது. இந் நிகழ்வில் அதிபர், ஆசிரியர் கௌரி் மற்றும் உதவி ஆசிரியர்களும் 25க்கும் மேற்பட்ட மாணவச் செல்வங்களும் கலந்து கொண்டு பிறந்ததின வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
முதலில் பிறந்ததின கேக் இரு சிறார்களால் வெட்டி கற்கண்டும் மிட்டாய்களும் வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மாணவர்கள் உட்பட கலந்துகொண்ட அனைவருக்கும் மதியநேர உணவும் வழங்கப்பட்டது.
கட்சியின் சமூக மேம்பாட்டுப் பிரிவின் ஊடாக இடம்பெற்ற இந்நிகழ்வில் நன்றியுரையினை மன்னார் மாவட்ட ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் செயலாளர் தோழர் ஜேம்ஸ் அவர்கள் ஆற்றியிருந்தார்.

