ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் 37ஆவது ஆசிய பசுபிக் வலய மாநாட்டின் ஆரம்ப அமர்வு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று இடம்பெறவுள்ளது. கொழும்பில் நேற்று ஆரம்பமான இந்த மாநாடு நாளை மறுதினம்(22) வரை நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் ஆசிய பசுபிக் வலயத்தைச் சேர்ந்த 42 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர். இவற்றில் 35 நாடுகளின் விவசாய அமைச்சர்களும் பிரதியமைச்சர்களும் 300-இற்கும் மேற்பட்ட அதிகாரிகளும் கலந்துகொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது. மாநாட்டின் பிரதம விருந்தினராக ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் பணிப்பாளர் நாயகம் Qu Dongyu பங்கேற்கின்றார். Read more
பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டமூலத்தின் பல சரத்துகளை அவ்வாறே நிறைவேற்றுவதாக இருந்தால் விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. சட்டமூலத்தின் 62 (1) சரத்தை அவ்வாறே நிறைவேற்ற பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகள் தேவை என்பதே உயர் நீதிமன்றத்தின் நிலைப்பாடாகும். உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தை பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஸ இன்றைய சபை அமர்வின் போது அறிவித்தார்.