Header image alt text

வவுனியா இறம்பைக்குளத்தில் 21.02.2002இல் மரணித்த தோழர்கள் வாசன் (இராஜரட்ணம் ஜெயச்சந்திரன் – யாழ்ப்பாணம்), சத்தியா (கைலாசப்பிள்ளை செந்தமிழ்செல்வன்) ஆகியோரது 22ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…..

வவுனியா நொச்சிமோட்டையில் 21.02.1992இல் மரணித்த தோழர்கள் நிதி (இராசையா மோகன் – பாலையடிவட்டை), அகிலன் (அந்தோனி இராஜேந்திரன் – மட்டக்களப்பு) ஆகியோரது 32ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…

லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிறுநீரக சத்திரசிகிச்சையின் பின்னர் சிறுவன் உயிரிழந்தமை தொடர்பிலான வழக்கு  விசாரணை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. இதன்போது, வௌிநாடு சென்றுள்ள வைத்தியர்கள் இருவரை அழைத்து வாக்குமூலம் பெற்று விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொரளை பொலிஸாருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.  குறித்த வழக்கு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனவெல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மொஹம்மட் ஹம்தி ஃபலீம் என்ற மூன்று வயதான சிறுவன், சிறுநீரக சத்திர சிகிச்சையின் போது பழுதடைந்த சிறுநீரகம் இணைக்கப்பட்டு ஆரோக்கியமான சிறுநீரகம் அகற்றப்பட்டதால் உயிரிழந்தார். Read more

இலங்கை கடற்படையின் புதிய பணிக்குழாம் பிரதானியாக ரியர் அட்மிரல் பிரதீப் ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. ரியர் அட்மிரல் பிரதீப் ரத்நாயக்க, மாத்தளை சென். தோமஸ் கல்லூரியின் பழைய மாணவர் ஆவார். அவர் 1987 இல் இலங்கை கடற்படையின் நிறைவேற்றுப் பிரிவில் கெடட் அதிகாரியாக இணைந்தார்.