Posted by plotenewseditor on 22 February 2024
Posted in செய்திகள்
எல்லை தாண்டி மீன் பிடியில் ஈடுபட்டமைக்காக இம்மாதம் 8 ஆம் திகதி கைது செய்யப்பட்ட 18 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மீனவர்கள் பயணித்த படகொன்று அரசுடைமையாக்கப்பட்டுள்ளதுடன், படகோட்டி ஒருவருக்கு 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நெடுந்தீவு கடற்பரப்பில் இரண்டு படகுகளுடன் எல்லை தாண்டி மீன்பிடித்துக்கொண்டிருந்த போது 19 தமிழக மீனவர்களும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர். கடற்படையினரால் ஒப்படைக்கப்பட்ட தமிழக மீனவர்களை யாழ். மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகள் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். Read more