இலங்கையின் சனத்தொகையில் 40 வீதமானோருக்கு கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அண்ணளவாக 92 இலட்சம் பேருக்கு கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், நாட்டின் மொத்த மக்கள் தொகை கிட்டத்தட்ட 22 கோடி அவர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் கடவுச்சீட்டு பெற்றுள்ளதாகவும் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்நிலையில், நாட்டில் இலத்திரனியல் கடவுச்சீட்டு சேவையை அறிமுகப்படுத்த தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அலுவலகத்தில் தற்போதுள்ள வரிசைகளை குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.