எமது கழகத்தினதும் கட்சியினதும் சிரேஸ்ட உபதலைவரும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் செயலாளருமான, தோழர் வேலாயுதம் நல்லநாதர் (இராகவன், ஆர்.ஆர்) அவர்களுக்கான அஞ்சலி நிகழ்வு நேற்று (25.02.2024) வவுனியா கோயில்குளம் உமாமகேஸ்வரன் நினைவில்லத்தில் கட்சியின் பொருளாளர் க.சிவநேசன்(பவன்) தலைமையில் நடைபெற்றது. தலைமையுரையினைத் தொடர்ந்து அஞ்சலி உரைகள் மற்றும் நினைவுக் கவிதைகள் என்பன இடம்பெற்றன. தமிழரசுக் கட்சியின் சிரேஸ்ட துணைத் தலைவரும், வட மாகாணசபை தவிசாளருமான சீ.வீ.கே சிவஞானம், ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழீழ விடுதலை இயக்கத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்,

ஜனநாயக போராளிகள் கட்சியின் வேந்தன், தமிழ் தேசியக் கட்சி என். சிறீகாந்தா (சிரேஸ்ட சட்டத்தரணி), ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபன், மேல்மாகாணசபை முன்னாள் உறுப்பினர் கலாநிதி குமரகுருபரன்,
தமிழர் சமூக ஜனநாயக கட்சித் தலைவர் சுகு சிறீதரன், சமத்துவக் கட்சித் தலைவர் சந்திரகுமார், டான் குழுமப் பணிப்பாளர் குகநாதன், சுழிபுரம் கிழக்கு கண்ணகையம்மன் ஆலய தர்மகர்த்தா, தலைவர் சுழிபுரம் சிவம்,
இலங்கை செஞ்சிலுவைச் சங்க மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் தலைவர் வசந்தராஜா, அரசியல் ஆய்வாளர்கள் ஜதீந்திரா, தி.பரந்தாமன், புதிய ஜனநாயக மார்க்சீச லெனினிச கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் சோ.தேவராஜா, மார்க்சீச லெனினிச கட்சி – வவுனியா) பிரதீபன்,
கட்சியின் ஐக்கிய இராஜ்ஜிய தோழர் பாலா, கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், கட்சியின் ஊடகப் பிரிவு பொறுப்பாளர் இரா.தயாபரன், கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் கே.மகேந்திரன் ராஜா,
கலாநிதி நடேசன் ரவீந்திரன் (ஓய்வுபெற்ற விரிவுரையாளர் – தேசிய கல்வியியல் கல்லூரி), கட்சித் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் உரையாற்றியதுடன்,
ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் பாலித ரங்கே பண்டார, முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோரின் இரங்கல் செய்திகளும் வாசிக்கப்பட்டன.
நன்றியுரையினை தோழர் இராகவனின் குடும்ப உறுப்பினர்கள் சார்பாக அவரது மருமகள் சுபா அவர்களும், கழகம் சார்பாக முன்னாள் வவுனியா நகரசபைத் தலைவரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான ஜி.ரி லிங்கநாதன் ஆகியோர் ஆற்றியிருந்தனர்.
அஞ்சலி நிகழ்வில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, முன்னாள் மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் சயந்தன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்ததோடு,
எமது கட்சியின் உயர்பீட மற்றும் மத்தியகுழு உறுப்பினர்கள், சிரேஸ்ட உறுப்பினர்கள், மாவட்ட அமைப்பாளர்கள், கட்சியின் உள்ளுராட்சிசபை உறுப்பினர்கள், தோழர்கள், கட்சியின் ஆதரவாளர்கள், ஏனைய கட்சிப் பிரமுகர்கள், பொதுமக்கள் எனப் பெருமளவிலானோர் கலந்து கொண்டிருந்தனர்.