Header image alt text

தமிழீழ மக்கள் மக்கள் விடுதலைக் கழகம் மற்றும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (PLOTE, DPLF) சிரேஷ்ர உபதலைவரும் , ஜனநாயக தமிழ் தேசிய முன்னணியின் (DTNA ) செயலாளருமான தோழர் இராகவன் , R.R ( வேலாயுதம் நல்லைநாதர் ) அவர்களின் அஞ்சலி நிகழ்வு கனடாவின் Toronto நகரில் இடம் பெற்றது.
வவுனியாவில் அவரின் உடல் அடக்கம் செய்யப்பட்ட அதே தினமான ஞாயிற்றுக்கிழமை இந்த அஞ்சலி கூட்டம் இடம் பெற்றிருந்தது. இந்த நிகழ்வினை கழக தோழர்கள், நண்பர்கள் மற்றும் சுழிபுரத்தினை சேர்ந்த அன்பர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிகழ்வில் கழகத்தின் கனடா கிளையின் பொறுப்பாளர் தோழர் க.கந்தசாமி மற்றும் பொருளாளர் இ.விஜயசேகரன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

Read more

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் நாளை முதல் இரண்டு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட தயாராகி வருகின்றனர். சம்பள பிரச்சினையை சுட்டிக்காட்டி இந்த அடையாள வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படவுள்ளது. தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் சம்பளத்தை அதிகரிக்கக் கோரி பல்கலைக்கழக கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்கள் அண்மைக்காலமாக பல்வேறு தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொண்டனர். எவ்வாறாயினும், அண்மையில் அரசாங்கம் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களுக்கான கொடுப்பனவுகளை அதிகரிக்க நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

27.02.2022இல் மரணித்த கிளிநொச்சி முரசுமோட்டையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட தோழர் அரபாத் (சிற்றம்பலம் திருச்செல்வம்) அவர்களின் 2ம் ஆண்டு நினைவுநாள் இன்று….

காஸாவிற்கான சிறுவர் நிதியமொன்றை அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. காஸாவில் இடம்பெற்ற மோதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஜனாதிபதி இந்த யோசனையை அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தார். இந்த ஆண்டுக்கான இப்தார் கொண்டாட்டத்திற்காக அனைத்து அமைச்சுக்கள் மற்றும் அரச நிறுவனங்களுக்கும் மேற்கொள்ளப்பட்டிருந்த நிதி ஒதுக்கீட்டை இந்த நிதியத்திற்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் ஊடாக இலங்கை அரசாங்கம் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை நன்கொடையாகவும் வழங்கவுள்ளது. Read more

புதிதாக 2000 கிராம உத்தியோகத்தர்களை சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் ப்ரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார். கிராம உத்தியோகத்தர்களுக்கான பரீட்சை பெறுபேறுகள், பரீட்சைகள் திணைக்களத்தினால் அரச நிர்வாக அமைச்சிற்கு வழங்கப்பட்டுள்ளன. தகுதி பெற்ற சுமார் 4000 பேரை நேர்முகப் பரீட்சைக்காக அழைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். Read more