தோழர் வெள்ளை (விஜயேந்திரன்) அவர்களின் தாயார் பூபாலப்பிள்ளை சாந்தம் அவர்கள் (27.02.2024) காலமானார். அவரது பிரிவால் துயருற்றிருக்கும் தோழர் வெள்ளை அவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களோடு நாமும் இப் பெருந்துயரினை பகிர்ந்து கொண்டு அவருக்கு எமது இதயபூர்வ அஞ்சலியையும் சமர்ப்பிக்கின்றோம்.
இந்தியாவின் இரண்டு கரையோர பாதுகாப்பு கப்பல்கள் காலி மற்றும் கொழும்பு துறைமுகங்களுக்கு சுற்றுலா மேற்கொள்வதற்காக வந்துள்ளன. இந்தியாவின் கரையோர பாதுகாப்பு படைப்பிரிவிற்கு சொந்தமான சமர்த் எனும் கடல்சார் கண்காணிப்பு கப்பலும், அபினவ் எனப்படும் அதிவேக கண்காணிப்பு கப்பலும் வந்துள்ளன. குறித்த கப்பல்கள் நேற்று காலி துறைமுகத்தை வந்தடைந்ததுடன், மார்ச் முதலாம் திகதி வரை காலியில் தரித்திருக்கவுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிற்கு எதிராக எதிர்க்கட்சி கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லா பிரேரரணைக்கு ஆதரவளிக்க ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது. சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரரணைக்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பத்துடன் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தின் பரிந்துரைகளை கருத்திற்கொள்ளாமல், நிகழ்நிலை காப்பு சட்டத்தை நிறைவேற்ற சபாநாயகர் நடவடிக்கை எடுத்துள்ளதாக எதிர்க்கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.