நிகழ்நிலை காப்பு சட்டத்தில் (Online Safety Bill) சபாநாயகர் கையொப்பமிட்டமையை சவாலுக்குட்படுத்தி ஜனாதிபதி சட்டத்தரணி M.A.சுமந்திரன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி M.A.சுமந்திரன் தாக்கல் செய்த இந்த மனு ப்ரியந்த ஜயவர்தன, ஷிரான் குணரத்ன, அச்சல வெங்கப்புலி ஆகிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. உயர் நீதிமன்றம் வழங்கிய பரிந்துரைகளுக்கு முரணாக சபாநாயகர் நிகழ்நிலை காப்பு சட்டத்தில் கையொப்பமிட்டுள்ளதாக தெரிவித்து பாராளுமன்ற உறுப்பினர் இந்த அடிப்படை உரிமை மனுவைத் தாக்கல் செய்திருந்தார். Read more
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவி வகித்த சந்தர்ப்பத்தில் பயன்படுத்திய, கொழும்பு பெஜட் வீதியில் (Paget Road) அமைந்துள்ள இல்லத்தை, அவர் ஜனாதிபதி பதவியில் இருந்து விலகிய பின்னரும் பயன்படுத்த ஏதுவாக அமைச்சரவை மேற்கொண்ட தீர்மானத்தை வலுவற்றதாக்கி உயர் நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் மற்றும் அதன் நிறைவேற்று பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான தெரிவுகளை இரத்து செய்ய திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் பிரதிவாதிகள் தரப்பில் இன்று இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய மாநாட்டை இடைநிறுத்த கோரி திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இது தொடர்பில் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது இலங்கை தமிழரசு கட்சியின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி K.V.தவராசா உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழாத்தினர் முன்னிலையாகியிருந்தனர்.