Posted by plotenewseditor on 2 February 2024
Posted in செய்திகள்
நிகழ்நிலை காப்பு சட்டமூலம், பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் FORUM-ASIA அமைப்பு அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளது. இந்த அமைப்பு 23 நாடுகளில் செயற்படும் 85 ஆசிய நாடுகளின் உறுப்பினர்களைக் கொண்ட ஒரு பிராந்திய மனித உரிமைகள் அமைப்பாகும். சம்பந்தப்பட்ட சட்டமும் சட்டமூலமும் நாட்டு மக்களின் மனித உரிமைகளுக்கும் சுதந்திரத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என அவ்வமைப்பு கூறியுள்ளது. பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் உள்ள பயங்கரவாதத்தின் பரந்த வரையறை, வரையறுக்கப்பட்ட நீதித்துறை மேற்பார்வை, மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்குள்ள வரம்புகள் FORUM-ASIA-வின் கரிசனையை ஈர்த்துள்ளன. Read more