Header image alt text

வவுனியா நொச்சிமோட்டையில் 21.02.1992இல் மரணித்த தோழர்கள் நிதி (இராசையா மோகன் – பாலையடிவட்டை), அகிலன் (அந்தோனி இராஜேந்திரன் – மட்டக்களப்பு) ஆகியோரது 32ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…

லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிறுநீரக சத்திரசிகிச்சையின் பின்னர் சிறுவன் உயிரிழந்தமை தொடர்பிலான வழக்கு  விசாரணை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. இதன்போது, வௌிநாடு சென்றுள்ள வைத்தியர்கள் இருவரை அழைத்து வாக்குமூலம் பெற்று விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொரளை பொலிஸாருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.  குறித்த வழக்கு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனவெல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மொஹம்மட் ஹம்தி ஃபலீம் என்ற மூன்று வயதான சிறுவன், சிறுநீரக சத்திர சிகிச்சையின் போது பழுதடைந்த சிறுநீரகம் இணைக்கப்பட்டு ஆரோக்கியமான சிறுநீரகம் அகற்றப்பட்டதால் உயிரிழந்தார். Read more

இலங்கை கடற்படையின் புதிய பணிக்குழாம் பிரதானியாக ரியர் அட்மிரல் பிரதீப் ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. ரியர் அட்மிரல் பிரதீப் ரத்நாயக்க, மாத்தளை சென். தோமஸ் கல்லூரியின் பழைய மாணவர் ஆவார். அவர் 1987 இல் இலங்கை கடற்படையின் நிறைவேற்றுப் பிரிவில் கெடட் அதிகாரியாக இணைந்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் 37ஆவது ஆசிய பசுபிக் வலய மாநாட்டின் ஆரம்ப அமர்வு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று இடம்பெறவுள்ளது. கொழும்பில் நேற்று ஆரம்பமான இந்த மாநாடு நாளை மறுதினம்(22) வரை நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் ஆசிய பசுபிக் வலயத்தைச் சேர்ந்த 42 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர். இவற்றில் 35 நாடுகளின் விவசாய அமைச்சர்களும் பிரதியமைச்சர்களும் 300-இற்கும் மேற்பட்ட அதிகாரிகளும் கலந்துகொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது. மாநாட்டின் பிரதம விருந்தினராக ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் பணிப்பாளர் நாயகம் Qu Dongyu பங்கேற்கின்றார். Read more

பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டமூலத்தின் பல சரத்துகளை அவ்வாறே நிறைவேற்றுவதாக இருந்தால் விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. சட்டமூலத்தின் 62 (1) சரத்தை அவ்வாறே நிறைவேற்ற பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகள் தேவை என்பதே உயர் நீதிமன்றத்தின் நிலைப்பாடாகும். உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தை பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஸ இன்றைய சபை அமர்வின் போது அறிவித்தார்.

18.02.2024 ஞாயிற்றுக்கிழமை காலை மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேசசபையின் வட்டக்கண்டலில் மிகப் பழைமை வாய்ந்த பிள்ளையார் ஆலயத்தின் அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு சுவிஸ் குறிச்சியில் வசிக்கும் திரு பார்த்தீபன் தம்பதியினரின் செல்வப்புதல்வர்கள் பார்த்தீபன் ஆதிசன் பார்த்தீபன் ஆகிசன் ஆகியோரின் பிறந்ததின வைபவம் நடைபெற்றது. இந் நிகழ்வில் அதிபர், ஆசிரியர் கௌரி் மற்றும் உதவி ஆசிரியர்களும் 25க்கும் மேற்பட்ட மாணவச் செல்வங்களும் கலந்து கொண்டு பிறந்ததின வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

Read more

19.02.2016இல் மரணித்த யாழ். நெடுந்தீவை பிறப்பிடமாகவும், வவுனியா செட்டிகுளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை தர்மலிங்கம் அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும். விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் இளைஞர் பேரவையிலும், அதன் பின்னர் காந்தீயம் அமைப்பிலும் தம்மை இணைத்துக்கொண்டு மக்கள் பணியினை ஆரம்பித்த இவர் அதன் பின்னர் கழகத்தின் அரசியல் பிரிவில் அதன் ஆரம்ப காலம் தொட்டு தீவிர செயற்பாட்டாளராக தொடர்ச்சியாக இயங்கி வந்தார்.

நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்காற்றிய மலையக தமிழ் மக்களின் பொருளாதார மற்றும் சமூக உரிமைகளை நிலைநாட்ட அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் தோட்டத் தொழிலாளர்களுக்காக 10,000 வீடுகளை நிர்மாணிக்கும் பாரத் லங்கா’ வீடமைப்புத் திட்டத்தின் நான்காம் கட்டம் ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து இன்று நிகழ்நிலை மூலம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் உரையாற்றும்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறித்த விடயத்தை தெரிவித்தார். Read more

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும், ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் பணிப்பாளர் நாயகம் Qu Dongyu ஆகியோருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகபிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்குரோத்து நிலையில் இருந்து இலங்கையை மீட்டெடுத்து பொருளாதார மறுசீரமைப்புகளை மேற்கொள்வதற்கு ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகளுக்கு இதன்போது வாழ்த்து தெரிவித்தார். Read more

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ஐக்கிய மக்கள் சக்தியில் வகிக்கும் பதவிகள் மற்றும் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்த தடை விதித்து கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த பின்னர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. 14 நாட்களுக்கு செல்லுபடியாகும் வகையில் இந்த இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, பொது செயலாளலர் ரஞ்சித் மத்தும பண்டார, தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க, பொருளாளர் ஹர்ஷ டி சில்வா ஆகியோர் இந்த மனுவின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.