மாலைதீவிலிருந்து சில்வர் மூன் என்ற சொகுசு பயணிகள் கப்பலொன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. பஹாமாஸ் கொடியுடன் வருகைத்தந்த இந்த கப்பலில் 516 சுற்றுலாப் பயணிகளும் 400 பணிக்குழாமினரும் வருகை தந்துள்ளனர். குறித்த சுற்றுலாப் பயணிகள் கொழும்பு, காலி உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயணிகள் கப்பல் இன்று பிற்பகல் மீண்டும் மாலைதீவு நோக்கிப் புறப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்கள் யுத்தத்தின் மகத்தான் தளபதி செயலதிபர் அமரர் தோழர் முகுந்தன் (க.உமாமகேஸ்வரன்) அவர்களின் 79ஆவது ஜனன தினம் இன்றாகும்…
நாட்டுக்கு வருகைத்தரும் சுற்றுலா கப்பல்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள் 50 சுற்றுலாக்கப்பல்கள் நாட்டுக்கு வருகைத்தரவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த கப்பல்கள் கொழும்பு, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை துறைமுகங்களில் நங்கூரமிடப்படும் எனவும் அந்த சபை தெரிவித்துள்ளது. இதேவேளை, சுற்றுலாத்துறை மூலம் இலங்கை 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டியுள்ளதாகவும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஈரானிய வௌிவிவகார அமைச்சர் ஹுசைன் அமீர் நாளை இலங்கைக்கு வருகைதரவுள்ளார். வௌிவிவகார அமைச்சர் அலி சப்ரியின் அழைப்பை ஏற்று அவர் இந்த விஜயத்தை மேற்கொள்வதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ஈரானிய வௌிவிவகார அமைச்சர் இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வௌிவிவகார அமைச்சரை சந்திக்கவுள்ளார். அவருடன் அந்நாட்டு ஜனாதிபதி அலுவலகத்தின் எரிசக்தி மற்றும் வௌிவிவகார அமைச்சுகளின் உயர்மட்ட அதிகாரிகளும் வருகைதரவுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு அமெரிக்காவின் பொது இராஜதந்திரத்திற்கான பிரதி இராஜாங்க செயலாளர் எலிசபெத் எம் எலன் நேற்று இலங்கை வந்துள்ளார். அவர் தமது விஜயத்தின்போது அரசாங்க அதிகாரிகள் ஊடகப் பிரதிநிதிகள் டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்குநர்கள் மற்றும் இளைஞர் தலைவர்களைச் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின்போது இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பங்காளித்துவம் இலங்கையின் தகவல் மற்றும் ஊடக வெளியைப் பாதுகாப்பது மற்றும் செழுமையை மேம்படுத்துவதற்கு ஒன்றிணைந்து செயல்படுவதற்கான வழிகள் குறித்து ஆராயப்படும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் குறிப்பிட்டுள்ளார்.
கச்சதீவு திருவிழாவை புறக்கணிக்க தமிழக மீனவர்கள் தீர்மானித்துள்ளனர். தமிழக மீனவர்களை இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக கைது செய்கின்றமையை கண்டித்து மீனவர்களால் இன்று நடத்தப்பட்ட அவசர ஆலோசனைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், கைது செய்யப்படும் இந்திய மீனவர்களுக்கு சிறைத்தண்டனை விதிப்பதை கண்டித்து காலவரையறையற்ற போராட்டத்தை முன்னெடுப்பது தொடர்பிலும் ராமேஷ்வரம் மீனவர்கள் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.
நிகழ்நிலை காப்பு சட்டம் உள்ளிட்ட சட்டங்களுடன் தொடர்புடைய பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக அமெரிக்க செனட் சபையின் வௌியுறவு தொடர்புகள் குழுவின் சிரேஷ்ட தொழில்சார் பணிக்குழாமின் பிரதிநிதிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். நாட்டின் பொருளாதாரம் மற்றும் அரசியல் நிலைமைகள் தொடர்பில் ஆழமான தௌிவை பெற்றுக்கொள்வதற்காக இந்த பிரதிநிதிகள் குழு நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக, அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தனது X பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
கட்புலனற்றோர் வாக்களிக்க விசேட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேல்தல்களின் போது வாக்களிப்பு நிலையத்தில் கடமையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளின் உதவியுடனேயே தற்போது அவர்கள் வாக்களித்து வருவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் R.M.A.L. ரத்நாயக்க தெரிவித்தார். இந்த திட்டத்தின் கீழ் Braille முறையில் அச்சிடப்பட்ட கட்சிகளின் பெயர்கள் மற்றும் வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய காகிதம் அவர்களுக்கு வழங்கப்படவுள்ளது. இது தொடர்பான விசேட மாதிரி வேலைத்திட்டம் நேற்று நுவரெலியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
தோழர் சோதி (மன்னார், முசலி, முத்தரிப்புத்துறை) அவர்களின் துணைவியார் திருமதி இருதயமலர் பெனடிற்குரூஸ் அவர்கள் நேற்று (15.02.2024) காலமானார். அவரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களோடு நாமும் இப் பெருந்துயரினை பகிர்ந்து கொண்டு அவருக்கு எமது இதயபூர்வ அஞ்சலியையும் சமர்ப்பிக்கின்றோம்.
16.02.1986 இல் வவுனியா சாஸ்திரிகூழாங்குளத்தில் மரணித்த தோழர் நியாஸ் (செ.அம்பிகைபாகன்- நொச்சிமோட்டை), மாயக்கண்ணன் ஆகியோரின் 38ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…