16.02.2007 இல் வவுனியா திருநாவற்குளத்தில் மரணித்த தோழர் கோன் (செல்லர் இராசதுரை- வவுனிக்குளம்) அவர்களின் 17ஆம் ஆண்டு நினைவுநாள்….
Posted by plotenewseditor on 16 February 2024
Posted in செய்திகள்
16.02.2007 இல் வவுனியா திருநாவற்குளத்தில் மரணித்த தோழர் கோன் (செல்லர் இராசதுரை- வவுனிக்குளம்) அவர்களின் 17ஆம் ஆண்டு நினைவுநாள்….
Posted by plotenewseditor on 16 February 2024
Posted in செய்திகள்
மனித உரிமைகள் மற்றும் சமூக நீதி தொடர்பான தரத்தில் இலங்கை பின்னோக்கிச் செல்வதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கை தொடர்ந்தும் தவறான நிர்வாகம் மற்றும் பொறுப்புக்கூறல் குறைபாடு காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியினால் சிரமத்திற்குள்ளாகி வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக நீதி மற்றும் உரிமைகள் தொடர்பில் அவதானம் செலுத்துவதற்கு பதிலாக, கருத்து வேறுபாடுகளை ஒடுக்குவதிலும், மனித உரிமைகள் மீதான சர்வதேச கவனத்தை மட்டுப்படுத்துவதிலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது. Read more
Posted by plotenewseditor on 16 February 2024
Posted in செய்திகள்
சில நாடுகளுடன் இணைந்து கைதிகள் பரிமாற்றத்தை மேற்கொள்வதற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திடும் நடவடிக்கையை விரைவுபடுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த உடன்படிக்கையின் ஊடாக வௌிநாடுகளில் கைது செய்யப்படும், நாட்டில் தேடப்படும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள குற்றவாளிகளை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான இயலுமை ஏற்படுமென பதில் பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்தார். தற்போது சில நாடுகளுடன் இணைந்து அத்தகைய உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டுள்ளதாகவும் மேலும் சில நாடுகளுடன் இணைந்து விரைவில் கைதிகள் பரிமாற்ற உடன்படிக்கைகளில் கைச்சாத்திட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். Read more
Posted by plotenewseditor on 16 February 2024
Posted in செய்திகள்
தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சிறுமி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. குறித்த சிறுமி நேற்று மாலை காணாமற்போயுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, பிரதேச மக்கள் தேடுதலில் ஈடுபட்ட போது, தென்னந்தோட்டத்தில் இருந்து இன்று காலை சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சிறுமியின் தாயும் தந்தையும் புத்தளம் – பூக்குளம் கிராமத்தில் வசித்து வருவதுடன், பாடசாலை செல்வதற்காக சிறுமியும் அவரது இரு மூத்த சகோதரிகளும் சகோதரனுடன் ஊர்மனை கிராமத்திலுள்ள அம்மம்மாவின் வீட்டில் வசித்துவந்துள்ளமை தெரியவந்துள்ளது. Read more
Posted by plotenewseditor on 16 February 2024
Posted in செய்திகள்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் இஸ்ரேலின் போக்குவரத்து மற்றும் வீதி பாதுகாப்பு அமைச்சர் பிரிகேடியர் ஜெனரல் மிரி ரெகேவ் (Brig. Gen. Miri Regev)ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பு இன்று காலை ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகபிரிவு தெரிவித்துள்ளது. ஹமாஸ் போராளிகளால் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டுள்ள இஸ்ரேலியர்களை மீட்பதற்கு இலங்கை தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்கும் என்றும் காஸா பகுதியில் இடம்பெறும் மோதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். Read more
Posted by plotenewseditor on 16 February 2024
Posted in செய்திகள்
பலாலி விமான நிலையத்தின் ஊடாக இந்தியாவுக்கான மற்றுமொரு தினசரி விமான சேவையை ஆரம்பிப்பது தொடர்பில் இண்டிகோ விமான சேவை நிறுவனத்துடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அத்துடன் மத்தள விமான நிலையம் தொடர்பில் முதலீட்டு விருப்பங்கள் கோரப்பட்டன. அதற்கான விலைமனு சபை ஒரு முதலீட்டாளரை தெரிவு செய்துள்ளது. குறித்த முதலீட்டாளருடனான பேச்சுவார்த்தைகள் தற்போது இறுதி கட்டத்தில் உள்ளன. அடுத்த வாரம் உடன்பாடு எட்டப்படலாம். Read more
Posted by plotenewseditor on 15 February 2024
Posted in செய்திகள்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவளிக்க போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். பல்வேறு வேட்பாளர்களை ஆதரிக்க தீர்மானிக்கவுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என்றும் அவர் அறிக்கையொன்றை வெளியிட்டு சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், ஐக்கிய மக்கள் முன்னணியின் தலைமைப் பொறுப்பை ஏற்க தயாராக இருப்பதாக வெளியான செய்திகளும் உண்மைக்கு புறம்பானவை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்
Posted by plotenewseditor on 15 February 2024
Posted in செய்திகள்
எதிர்வரும் 19ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த இலங்கை தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டிற்கு இருவேறு நீதிமன்றங்கள் இன்று இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்துள்ளன. கடந்த 21 மற்றும் 27 ஆம் திகதிகளில் நடைபெற்ற கட்சியின் பொதுச் சபை கூட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட தெரிவுகளில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாகவும், அந்த தீர்மானங்களை ரத்து செய்து உத்தரவிடக்கோரியும் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. குறித்த மனுவை திருகோணமலை சாம்பல்தீவு – கோணேஷபுரியைச் சேர்ந்த சந்திரசேகரம் பரா என்பவர் தாக்கல் செய்திருந்தார். Read more
Posted by plotenewseditor on 14 February 2024
Posted in செய்திகள்
யாழ்ப்பாணம் – சுன்னாகம் – இணுவில் பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பேர் உயிரிழந்தனர். குறித்த பகுதியில் தொடருந்து ஒன்றுடன் வேன் ஒன்று மோதியே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. சம்பவத்தில் 32 வயதான தந்தையும் 6 மாத மகளும் உயிரிழந்துள்ளதாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்த தாய் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். சம்பவம் தொடர்பான விசாரணைகளை சுன்னாகம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Posted by plotenewseditor on 14 February 2024
Posted in செய்திகள்
தமி்ழ்த்தேசியப் பற்றாளரும், சமூக மற்றும் சமயத் தொண்டருமாகிய இந்திரகுமார் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்ப உறவுகள் மற்றும் நண்பர்களோடு நாமும் இப்பெரும் துயரினைப் பகிர்ந்து கொள்வதோடு அன்னார்க்கு எமது இதயபூர்வ அஞ்சலியையும் சமர்ப்பிக்கிறோம்.