Header image alt text

தற்போது நாடு உள்ள சூழ்நிலையில் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையே அவசியமாகவுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் – வடமராட்சி – வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திற்கு தலைமை தாங்கி கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும் நாடாளுமன்றத்துக்கும், நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதிக்கும் இடையிலான சம தன்மை பேணப்பட வேண்டும் எனவும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

 

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட சாந்தன் ஒரு வாரத்தில் இலங்கை செல்ல அனுமதிக்கப்படுவார் என சென்னை மேல்நீதிமன்றத்தில் இந்திய மத்திய அரசின் சார்பில் முன்னிலையான மேலதிக மன்றாடியர் நாயகம் உறுதியளித்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினி, முருகன், சாந்தன் உட்பட ஏழு பேர் கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் விடுதலை செய்யப்பட்டனர். இதனையடுத்து, விடுதலை செய்யப்பட்ட இலங்கையர்களான முருகன் மற்றும் சாந்தன் உள்ளிட்டோர் திருச்சி சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கட்டார் நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த எட்டு முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஏழு பேர் நாடு திரும்பியுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு இன்றைய தினம் தெரிவித்துள்ளது. கத்தாரில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிந்ததாக கூறப்படும் குறித்த சந்தேகநபர்கள் மீதான குற்றச்சாட்டுகளை கட்டாரோ அல்லது இந்தியாவோ வெளியிடவில்லை. எனினும் இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. Read more

72 சுகாதார தொழிற்சங்கங்கள் நாளை காலை 6 மணிமுதல் மீண்டும் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. வைத்தியர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள 35,000 ரூபாய் மேலதிக கொடுப்பனவு, தமக்கும் வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தி 72 சுகாதார தொழிற்சங்கங்கள் பல தடவைகளில் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தன. இந்த விடயம் தொடர்பில் நிதியமைச்சின் அதிகாரிகளுக்கும், சுகாதார தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்றைய தினம் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இடம்பெற்றது. Read more

இணையவழி பாதுகாப்பு சட்டத்தின் சில சரத்துக்களில் திருத்தம் மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இன்று நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் குறித்த சட்டம் தொடர்பான திருத்தங்கள் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்பட்ட ஆட்சேபனைகளுக்கு மத்தியில் இந்த சரத்துகளில் திருத்தம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் குறித்த திருத்தங்கள் இன்றைய தினம் ஏற்றுக் கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Read more

மருந்து விநியோகப்பிரிவின் முன்னாள் பணிப்பாளர்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மருந்து கொடுக்கல் – வாங்கலில் முன்னெடுக்கப்பட்ட நடைமுறை தொடர்பில் இவ்வாறு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைவாக இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சர்ச்சைக்குரிய ஹியூமன் இமியுனோகுளோபியூலின் மருந்து கொடுக்கல் – வாங்கல் தொடர்பான விசாரணைகளின் தொடர்ச்சியாக முன்னாள் பணிப்பாளர்களிடமும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. Read more

அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற இந்து சமுத்திர மாநாட்டில் கலந்துகொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட குழுவினர் இன்றுகாலை நாடு திரும்பினர். ஶ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்றின் மூலம் அவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர். இந்த வருடம் ஜனாதிபதி தேர்தலையும் பொதுத் தேர்தலையும் நடத்தவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிமரசிங்க தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

இந்த வருடம் (2024) ஜனாதிபதி தேர்தலையும் பொதுத்தேர்தலையும் நடத்தவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்மரசிங்க தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் இந்திய ஊடகமான WION-க்கு வழங்கிய நேர்காணலின் போது ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார் இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் இந்திய வௌிவிவகார அமைச்சர் S.ஜெய்சங்கர் இடையிலான சந்திப்பு அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் நடைபெற்றுள்ளது. நேற்று இந்த கலந்துரையாடல் நடைபெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அஸ்வெசும திட்டத்தில் மேலும் 4 இலட்சம் பயனாளர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் இந்த திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். அஸ்வெசும திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ள 20 இலட்சம் பயனாளர்களின் எண்ணிக்கையை மேலும் 4 இலட்சத்தினால் அதிகரிக்கவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். அஸ்வெசும கிடைக்காத 10 இலட்சம் பேரின் முறைப்பாடுகள் பரிசீலிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் நிலத் தொடர்பை ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் ஆய்வுகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் நேற்று (09) தெரிவித்தார். இதன் மூலம் கொழும்பு மற்றும் திருகோணமலை துறைமுகங்களை பொருட்கள் பரிமாற்ற மத்திய நிலையமாக மாற்றியமைக்க முடியும் என இந்து சமுத்திர மாநாட்டில் ஜனாதிபதி தெரிவித்தார். ஏழாவது இந்து சமுத்திர மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்ஷங்கர், அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜெனி வோன் மற்றும் சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.