Header image alt text

கழகத்தின் முன்னைநாள் மட்டு அம்பாறை திருமலை பிராந்திய பொறுப்பாளர் தோழர் G. T. R. அவர்களின் 50,000/- நிதிப்பங்களிப்புடன் வெள்ள நிவாரணம் வழங்கி வைக்கப்பட்டது. இதன்படி வவுணதீவு பிரதேசத்தில் புதுமண்டபத்தடி, கரையாக்கன்தீவு, நடராசானந்தபுரம், இருட்டுச்சோலைமடு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 25 குடும்பங்களுக்கு தலா 2,000/- ரூபா பெறுமதியான உலருணவுப் பொதிகள் கட்சியின் துணைத்தலைவர் பொன். செல்லத்துரை அவர்களால் இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

Read more

நிகழ்நிலை காப்பு சட்டத்தின் சில பிரிவுகள் உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்துடன் இணங்கவில்லை என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சபாநாயகருக்கு அறிவித்துள்ளது. இந்த குறைபாடுகள் தொடர்பில் தாம் மிகுந்த கவலையடைவதாக மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் L.T.B. தெஹிதெனியவின் கையொப்பத்துடன் சபாநாயகருக்கு அனுப்பப்பட்டுள்ள இந்த கடிதத்தின் பிரதிகள், ஜனாதிபதி, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் சட்ட மா அதிபருக்கும் அனுப்பப்பட்டுள்ளன. Read more

தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்தி சபைக்கு சொந்தமான பண்ணைகளை பார்வையிடுவதற்காக இந்தியாவின் அமுல் (Amul) நிறுவன பிரதிநிதிகள் குழுவொன்று நாட்டிற்கு வருகை தந்துள்ளது. அவர்கள் நேற்று முதல் பண்ணைகளை ஆய்வு செய்ய ஆரம்பித்துள்ளதாக தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது. அந்த பண்ணைகளின் எதிர்கால மேம்பாட்டுத் திட்டங்களை அமுல் நிறுவன பிரதிநிதிகள் குழு நடைமுறைப்படுத்தவுள்ளது. தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்தி சபைக்கு சொந்தமான 31 பண்ணைகள் 28,000 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பில் காணப்படுகின்றன. Read more

தெற்காசியாவிலேயே அதிக மின்சார கட்டணம் இலங்கையிலேயே வசூலிக்கப்படுவதாக Verité Research நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏனைய தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில், இலங்கையில் மின்சார கட்டணம் 3 மடங்கு அதிகமாக உள்ளதென அந்த  நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. பொருளாதாரம் மற்றும் தொடர்புபட்ட பகுப்பாய்வுத் தகவல்களை வழங்கும் இலங்கையின் பிரபல நிறுவனமான public finance.lk-வின் பகுப்பாய்வு அறிக்கையில்,  2024 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் உள்ளூர் மின்சார பாவனையாளர்கள் 100, 200, 300 அலகுகளை பயன்படுத்தியபோது செலுத்தியுள்ள கட்டணம் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது. இதன் பகுப்பாய்வின் போது  வழங்குநரின் உற்பத்திச் செலவு மாத்திரம் கவனத்திற்கொள்ளப்பட்டுள்ளது. Read more

08.02.1985 இல் பாக்குநீரிணையில் மரணித்த கழகத்தின் முதன்மைக் கடலோடி தோழர் பாண்டி (ஞானவேல் – வல்வெட்டித்துறை), தோழர்கள் சுதாகரன், ரஞ்சித் (டக்ளஸ்), ரூபன் (மோகன்ராஜ் – நெல்லியடி), அம்பி (ரவீந்திரன்- திருநகர்) ஆகியோரின் 39ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று… Read more

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று  அதிகாலை அவுஸ்திரேலியாவிற்கு பயணமானார். அவர் அவுஸ்திரேலியாவில் நடைபெறும் ஏழாவது  இந்து சமுத்திர மாநாட்டில் பங்கேற்கவுள்ளார். இந்தியா மன்றம் மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இந்த மாநாட்டில் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளார். இந்து சமுத்திர மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதான உரை நிகழ்த்தவுள்ளார். ஏழாவது இந்து சமுத்திர மாநாடு நாளையும் (09) நாளை மறுதினமும் (10) அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் நடைபெறவுள்ளது. Read more

மாலைதீவுகளின் பாதுகாப்பு படை பிரதானி லெப்டினன்ட் ஜெனரல் அப்துல் ரஹீம் அப்துல் லத்தீப் நாட்டிற்கு வருகை தந்துள்ளார். பாதுகாப்பு செயலாளர், ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரத்னவை அவர் இன்று சந்திக்கவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் இன்று பிற்பகல் இராணுவத் தளபதியையும் சந்திக்கவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது. பாதுகாப்பு சேவை கட்டளைகள் மற்றும் ஊழியர்கள் கல்லூரியின் அழைப்பிற்கிணங்க, மாலைதீவுகளின் பாதுகாப்பு படைபிரதானி நாட்டிற்கு வருகை தந்துள்ளார். Read more

2024ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பில், தாமதமின்றி பெயர்களை பதிவு செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. எதிர்வரும் 29 ஆம் திகதிக்கு முன்னர் பெயர்களைப் பதிவு செய்யுமாறு தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஒரு வீட்டிலிருந்து சமர்ப்பிக்கப்படும் வாக்காளர் பட்டியலில் 18 வயதுக்கு மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள் அனைவருடையதும் அல்லது வீட்டில் தங்கியுள்ள அனைவரினதும் தகவல்களை உள்ளடக்குவது கட்டாயமென அவர் கூறியுள்ளார். Read more

கழகத்தின் முன்னைநாள் மட்டு அம்பாறை திருமலை பிராந்திய பொறுப்பாளர் தோழர் G. T. R. அவர்களின் நிதிப்பங்களிப்புடன் இரண்டாம் கட்ட வெள்ள நிவாரண உதவிகள் 50 குடும்பங்களுக்கு இன்று வழங்கி வைக்கப்பட்டது. கட்சியின் அம்பாறை மாவட்ட பொறுப்பாளர் திரு. ப.ரவிசந்திரன் (சங்கரி ), செயலாளர் கங்கா மற்றும் ரோசி, மகேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டு நிவாரணம் வழங்கினர்.

Read more

தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களின் தாயார் அமிர்தநாதன் செபமாலை அவர்களுக்கான அஞ்சலி மற்றும் இறுதி நிகழ்வுகளில் புளொட் தலைவர் த. சித்தார்த்தன் (பா.உ) மற்றும் எமது கட்சி முக்கியஸ்தர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தார்கள். Read more