இலங்கை வரலாற்றில் முதற்தடவையாக சிரேஷ்ட சட்டவாதிகள் ஐவருக்கு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் ‘சிரேஷ்ட அறிவுறுத்தல் சட்டத்தரணி’ அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. கலாநிதி J.M. சுவாமிநாதன், D.M. சுவாமிநாதன், G.G. அருள்பிரகாசம், H.R.A.D.P.குணதிலக மற்றும் S.N.M.குணவர்தன உள்ளிட்டோருக்கே சிரேஷ்ட அறிவுறுத்தல் சட்டத்தரணி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. Read more
அரச நிறைவேற்று அதிகாரிகள் இரண்டு நாள் சுகயீன விடுமுறை பணிப்பகிஷ்கரிப்பினை ஆரம்பித்துள்ளனர். நிதி அமைச்சிற்கு முன்பாக அரச நிறைவேற்று அதிகாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சம்பள முரண்பாடுகள் உள்ளிட்ட தொழில்சார் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்காமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. அரச பொறியியல் சேவை, விவசாயம், கல்வி, சுகாதாரம், அறிவியல், தகவல் தொழில்நுட்பம், திட்டமிடல், நில அளவை, கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கம் உள்ளிட்ட 18 துறைகளில் அரச நிறைவேற்று சேவைகளில் ஈடுபடும் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுவிஸ் நாட்டில், சுவிஸ் சோசலிசக் கட்சியின் ஏற்பாட்டில் நடைபெற்ற மே தின ஊர்வலத்தில், புளொட் அமைப்பின் உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர். மேலும், சுவிஸ் இடதுசாரி அமைப்புக்கள், முற்போக்கு முன்னணிகள், சமூக அமைப்புகள், சுவிஸில் வாழும் பல்வேறு நாட்டு தேசிய இன மக்களின் விடுதலை அமைப்புகள், சமூக மேம்பாட்டு அமைப்புகள் என்பனவும் இணைந்து மேதின ஊர்வலம் நிகழ்த்தப்பட்டது. இவ் ஊர்வலம், சூரிச் நகரின் ஹெல்வெட்டியா பிளஸ் இல் தொடங்கி பெல்வி பிளாட்ஸ் வரை, சூறிச் நகர மத்தியினூடாக நகர்ந்து சென்றிருந்தது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 1700 ரூபாவாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த சம்பள அதிகரிப்பு நடைமுறை சாத்தியமற்றது என தெரிவித்து பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனம் நீதிமன்றத்தை நாட தீர்மானித்துள்ளது. தற்போதைய நிலைமையின் கீழ் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பளத்தை வழங்க முடியாதென பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனம் அறிவித்துள்ளது. இந்த சம்பள அதிகரிப்பை வழங்கினால்,