சுவிஸ் நாட்டில், சுவிஸ் சோசலிசக் கட்சியின் ஏற்பாட்டில் நடைபெற்ற மே தின ஊர்வலத்தில், புளொட் அமைப்பின் உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர். மேலும், சுவிஸ் இடதுசாரி அமைப்புக்கள், முற்போக்கு முன்னணிகள், சமூக அமைப்புகள், சுவிஸில் வாழும் பல்வேறு நாட்டு தேசிய இன மக்களின் விடுதலை அமைப்புகள், சமூக மேம்பாட்டு அமைப்புகள் என்பனவும் இணைந்து மேதின ஊர்வலம் நிகழ்த்தப்பட்டது. இவ் ஊர்வலம், சூரிச் நகரின் ஹெல்வெட்டியா பிளஸ் இல் தொடங்கி பெல்வி பிளாட்ஸ் வரை, சூறிச் நகர மத்தியினூடாக நகர்ந்து சென்றிருந்தது.