வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் ஆஜரானார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அண்மையில் வௌியிட்ட கருத்து குறித்து வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் திணைக்களத்தில் ஆஜராகியிருந்தார். இன்று காலை 10 மணியளவில் திணைக்களத்திற்கு சென்ற முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சுமார் 02 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்ததாக குற்றவியல் விசாரணை திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. Read more
வவுனியா திருநாவற்குளம் உமாமகேஸ்வரன் முன்பள்ளியில் நடைபெற்ற புதுவருட கொண்டாட்டத்தில் சிறப்பு அதிதியாக கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளரும் மத்தியகுழு உறுப்பினருமான க.சந்திரகுலசிங்கம் மோகன் அவர்கள் கலந்துகொண்டு பள்ளி மாணவர்களுக்கு கைவிசேடம் மற்றும் பரிசுகள் வழங்கியதுடன் இந்நிகழ்வில் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர் மற்றும் மதர்சங்க உறுப்பினர்கள், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சிறுவர் நலன் உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர் மற்றும் நலன்விரும்பிகள் பெற்றோர் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
03.05.2006இல் செட்டிகுளத்தில் மரணித்த தோழர் சௌந்தரம் (மரிசால் பற்றிக் ஜெபநேசன் – கோமரசன்குளம்) அவர்களின் 18ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று…..
கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகள் தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்வதற்காக ஆட்பதிவு திணைக்கள அலுவலகங்கள் நாளை திறக்கப்படும் என ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் பிரதீப் சபுதந்தி தெரிவித்தார். இம்முறை கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள விண்ணப்பதாரர்களில் சிலர் இதுவரை தமது தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்ளவில்லை என அவர் குறிப்பிட்டார்.
அம்பாறையில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 20 பாடசாலை மாணவர்கள் காயமடைந்துள்ளனர். பாடசாலை சேவையில் ஈடுபடும் பஸ்ஸூம் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸூம் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானதாக பொலிஸார் கூறினர். விபத்தில் காயமடைந்த மாணவர்கள் அம்பாறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.