அம்பாறையில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 20 பாடசாலை மாணவர்கள் காயமடைந்துள்ளனர். பாடசாலை சேவையில் ஈடுபடும் பஸ்ஸூம் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸூம் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானதாக பொலிஸார் கூறினர். விபத்தில் காயமடைந்த மாணவர்கள் அம்பாறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.