ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யோகோ கமிகாவா (Yōko Kamikawa) இன்று முற்பகல் நாட்டை வந்தடைந்துள்ளார். இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு, விசேட விமானமொன்றில் அவர் நாட்டிற்கு வருகை தந்துள்ளார். ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் இந்த விஜயத்தின் போது வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
இந்திய மக்களவைத் தேர்தல் பணிகளை மேற்பார்வை செய்வதற்காக இலங்கைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணையகத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் சர்வதேச தேர்தல் பார்வையாளர் நிகழ்ச்சியின் ஓர் அங்கமாக இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய தேர்தலொன்று நடைபெறுவதைக் காண்பதற்காக 23 நாடுகளில் உள்ள தேர்தல் முகாமைத்துவ அமைப்புகளுடன் தொடர்புடைய 75 சர்வதேச பார்வையாளர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையகம் அழைப்பு விடுத்துள்ளது.
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யோக்கோ கமிகாவா மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோர் கூட்டு செய்தியார் சந்திப்பொன்றை நடத்தியுள்ளனர். வெளிவிவகார அமைச்சில் இன்று(4) குறித்த செய்தியாளர் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி பொருளாதார நெருக்கடி காரணமாக இடைநிறுத்தப்பட்ட இலகு தொடருந்து திட்டம் மற்றும் உட்கட்டமைப்பு திட்டங்களை மீள ஆரம்பிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு இராச்சியத்தின் பல்வேறு சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 44 இலங்கையர்களுக்கு அரச பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ரமழான் மாதத்தை முன்னிட்டு இலங்கை கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டதாக ஐக்கிய அரபு இராச்சிய வௌிவிவகார அமைச்சின் ஊடாக அந்நாட்டிலுள்ள இலங்கை தூதரகத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறு குற்றங்களில் ஈடுபடும் நபர்களை வீட்டுக் காவலில் வைக்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஸ தெரிவித்தார். இது தொடர்பான சட்டமூலம் எதிர்காலத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். சிறு குற்றங்களுக்காக நீண்ட காலம் சிறையில் இருப்பவர்கள் மன ரீதியாக பாதிக்கப்படுவதுடன், அவர்கள் சமூகத்தில் பெரும் குற்றவாளிகளாகவே சித்தரிக்கப்படுகின்றனர்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷவுக்கும் இடையிலான மற்றுமொரு சந்திப்பு இன்று பிற்பகல் நடைபெறவுள்ளது. இருவருக்கும் இடையில் ஐந்தாவது தடவையாக இடம்பெறும் இந்த சந்திப்பு கொழும்பு ரூனெயளர் மஹகமசேகர மாவத்தையில் உள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெறவுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.