இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யோக்கோ கமிகாவா மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோர் கூட்டு செய்தியார் சந்திப்பொன்றை நடத்தியுள்ளனர். வெளிவிவகார அமைச்சில் இன்று(4) குறித்த செய்தியாளர் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி பொருளாதார நெருக்கடி காரணமாக இடைநிறுத்தப்பட்ட இலகு தொடருந்து திட்டம் மற்றும் உட்கட்டமைப்பு திட்டங்களை மீள ஆரம்பிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், இந்த சந்திப்பில் உரையாற்றிய ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யோக்கோ கமிகாவா, தமது இலங்கை விஜயத்தின் போது கடன் மறுசீரமைப்பு தொடர்பில் முக்கியமான பல தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.