06.05.2008 அன்று வவுனியாவில் மரணித்த கழகத்தின் சிரேஸ்ட உறுப்பினரும், சிறந்த சமூக சேவையாளருமான தோழர் பவான் (கந்தையா செல்வராசா) அவர்களின் 16ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று. இவர் வவுனியா எல்லைப்புறக் கிராமங்களைச் சேர்ந்த மக்களைப் பாதுகாப்பதில் அரும்பணியாற்றினார். விடிவினை நோக்கி மக்களை அரசியல்மயப்படுத்துவதிலும் தீவிர ஈடுபாடு காட்டினார்.
இலங்கை கடற்பரப்பில் தென்னிந்திய மீனவர்கள், பொடம் ட்ரோலிங் எனப்படும் வலையைப் பயன்படுத்தி நாட்டின் மீன் வளத்தை கொள்ளையடிப்பதைத் தடுக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவில், வெளிவிவகார அமைச்சை பிரதிவாதியாக பெயரிடுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வடக்கு மீனவர்கள் மற்றும் சுற்றாடல் நீதி மையம் ஆகியவற்றினால் தாக்கல் செய்யப்பட்ட குறித்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கிராம சேவையாளர் தரம் 3 இற்கான புதிய ஆட்சேர்ப்பு பட்டியல் இன்று உள்நாட்டலுவல்கள் அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கிராம சேவையாளர் தரம் 3 இற்கான பரீட்சை மற்றும் நேர்முகப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் காலாண்டு பயிற்சிக்குத் தகுதி பெற்ற 1,942 விண்ணப்பதாரர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. உள்நாட்டலுவல்கள் அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.moha.gov.lk இல் குறித்த பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர்கள், மாகாண அரச உத்தியோகத்தர்கள் மற்றும் நீதிமன்ற உத்தியோகத்தர்களுக்கு வரிச்சலுகையுடன் கூடிய வாகன இறக்குமதி உரிமம் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கட்டாய ஓய்வு பெறும் வயதெல்லை 65 வரை நீட்டித்து, பின்னர் ஓய்வு பெறும் வயதெல்லை 60 ஆக குறைக்கப்பட்ட நிலையில், அதற்கிடையிலான காலத்தில் 60 வயது பூர்த்தியான பின்னர் ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்காக இந்த வரிச்சலுகை வழங்கப்பட்டுள்ளது.