Header image alt text

எமது கட்சியின் முன்னாள் உபதலைவர்களுள் ஒருவரும், கட்சியின் முன்னாள் அம்பாறை மாவட்ட அமைப்பாளருமான (தோழர் பக்தன்) மகாதேவன் சிவநேசன் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவுநாள் இன்று…
மலர்வு – 1963.03.03
உதிர்வு –2021.05.09
80களின் ஆரம்பத்தில் அம்பாறை மாவட்டத்தில் காந்தீயம் அமைப்பின் முக்கிய செயற்பாட்டாளராக மக்கள் மத்தியில் தொண்டாற்றிய தோழர் பக்தன், இயல்பிலேயே இனப்பற்றும் சமூகப்பற்றும் மிகுந்தவர்.

Read more

09.05.1985இல் வல்வெட்டித்துறையில் மரணித்த தோழர் சுகுணன் (சுப்பிரமணியம் சுவேந்திரன் – வல்வெட்டி) அவர்களின் 39ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…..
கழகத்தின் ஆரம்ப அணியில் பயிற்சி பெற்ற இவர் , அசாத்திய துணிச்சல் மிக்க போராளியாவார். 1985.05.09ல் வல்வெட்டித்துறையில் படையினரால் சுற்றிவளைக்கப்பட்டபோது, நேரடி மோதலில் மரணமானார்.

டயானா கமகேவின் பாராளுமன்ற ஆசன வெற்றிடத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானை நியமிக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியினரால் தேர்தல்கள் ஆணையாளருக்கு இன்று (கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நிலையில், டயானா கமகேவின் பாராளுமன்ற ஆசன வெற்றிடத்திற்கு பொருத்தமான பெண் ஒருவரை நியமிக்குமாறு பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் ஐக்கிய மக்கள் சக்தியிடம் கோரிக்கை விடுத்துள்ளது. Read more

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டயானா கமகே வௌிநாடு செல்லத் தடை விதித்து கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.  சமூக செயற்பாட்டாளரான ஓஷல லக்மால் ஹேரத் உள்ளிட்டோரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஆராய்ந்த பின்னர் அவர் இந்த தடையுத்தரவை பிறப்பித்துள்ளார். குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளரிடம் போலியான தகவல்களை சமர்ப்பித்து கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. Read more

தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் பிரகாரம் செப்டம்பர் 17ஆம் திகதிக்கும் ஒக்டோபர் 16ஆம் திகதிக்கும் இடையில் ஜனாதிபதி தேர்தலை நடத்தவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அரசியலமைப்பு மற்றும் 1981ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க ஜனாதிபதி தெரிவு விசேட ஏற்பாடுகள் சட்டத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு, குறிப்பிட்ட காலத்திற்குள் வேட்புமனுக்கள் கோரப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. Read more