தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லு (Donald Lu ) உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு அடுத்த வாரம் நாட்டிற்கு வருகைதரவுள்ளார். எதிர்வரும் 15 ஆம் திகதி வரை இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்குஅவர் விஜயம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.
இந்த விஜயத்தின் போது இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்குஅமெரிக்காவினால் வழங்கப்படும் உதவிகள் தொடர்பில் விரிவான கலந்துரையாடல்இடம்பெறவுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
சுதந்திரமான, திறந்த மற்றும் வளமான இந்தோ–பசுபிக் பிராந்தியத்திற்கானஅமெரிக்காவின் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்துவதே, தெற்கு மற்றும் மத்திய ஆசியவிவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளரின் விஜயத்தின் நோக்கம்என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கை சந்தித்துள்ளார்.
இருதரப்பு உறவுகள், கடன் மறுசீரமைப்பு, தற்போதைய மறுசீரமைப்புகள் தொடர்பில்கலந்துரையாடுவதற்காக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அமெரிக்கதூதரகத்திற்கு வருகை தந்ததாக அமெரிக்க தூதுவர் தனது X பக்கத்தில்பதிவிட்டுள்ளார்.
வலுவான, ஆற்றல் மிக்க பொருளாதாரத்தை இலங்கையில் கட்டியெழுப்புவதற்காகஅமெரிக்கா தொடர்ந்து ஆதரவளித்து வரும் நிலையில் நல்லாட்சி, வெளிப்படைத்தன்மையின் அவசியத்தை தாம் வலியுறுத்தியதாக இலங்கைக்கானஅமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.