ரஷ்யஉக்ரைன் போருக்காக சட்டவிரோதமான முறையில் இலங்கையிலிருந்துஆட்கடத்தலில் ஈடுபட்ட மற்றுமொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கமைவாக, இவ்வாறான சம்பவம் தொடர்பில் இதுவரை 7 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் மற்றும் சார்ஜன்ட் ஒருவரும்உள்ளடங்குகின்றனர்.


ரஷ்யஉக்ரைன் யுத்தத்தில் இணைந்த இலங்கையர்கள் 6 பேர் உயிரிழந்துள்ளமைதற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ரஷ்யஉக்ரைன் மோதலில் 64 இலங்கையர்கள் பங்குபற்றியுள்ளமை இதுவரைமுன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும், இந்த எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்துச் செல்வதற்கானசந்தர்ப்பம் காணப்படுவதாக சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்தார்

இந்த ஆட்கடத்தல் தொடர்பான தகவல்களை பாதுகாப்பு அமைச்சின் 0112 441 146 எனும் இலக்கத்திற்கு தெரிவிக்க முடியும்.