Header image alt text

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளராக கீர்த்தி உடவத்த நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் நிறைவேற்றுக்குழு ஏகமனதாக எடுத்த தீர்மானத்துக்கமைய அவர் குறித்தபதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவி மற்றும் அந்த கட்சியின் நிறைவேற்றுகுழுவிலிருந்து முன்னதாக பதவி விலகினார். Read more

12.05.1998இல் வவுனியா கோவில்குளத்தில் மரணித்த தோழர்கள் தாஸ் (செல்லத்துரை சாந்தகுமார்), விந்தன் (தம்பிராஜா துரைராஜா), சாந்தன் (சின்னத்தம்பி சிவநேசன்), ஜூலி (செல்லத்தம்பி பத்மசீலன்), லோரன்ஸ் ஆகியோரின் 26ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று….

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு வடக்கு மாகாணத்தின் பலபாகங்களிலும் இன்றைய தினம் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது. அத்துடன் முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி பவனியும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது அதற்கமைய யாழ்ப்பாணத்தில் உள்ள நினைவுத் தூபியொன்றுக்கு அருகில் குறித்த ஊர்திபவனி ஆரம்பமானது

கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையின் ஆங்கிலப் பாட வினாத்தாள் WhatsApp ஊடாக பகிரப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கண்டிகட்டுகஸ்தோட்டை பகுதியில் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால்சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்ஆங்கிலப் பாட வினாத்தாள் பகிரப்பட்ட WhatsApp குழுவின் நிர்வாகியொருவரேஇவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். Read more

யாழ்ப்பாணம் – தெல்லிப்பளை, ஒட்டகப்புலத்தில் அண்மையில் விடுவிக்கப்பட்ட 234.8 ஏக்கர் காணிக்குள் பொதுமக்கள் பிரவேசிப்பதற்கான பாதைகள் திறக்கப்பட்டுள்ளன.  குறித்த பகுதியில் இரண்டு வீதிகள் திறக்கப்பட்டுள்ளதாக வட மாகாண ஆளுநர் அலுவலகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொன்னாலை –  பருத்தித்துறை கடற்கரை வீதியில் பலாலி வடக்கு பாடசாலைக்கு அருகிலும், விமான நிலைய வீதியில் மருதடி சந்தியிலிருந்து பலாலி நோக்கி செல்லும் வீரப்பளை வீதியும் இவ்வாறு திறக்கப்பட்டுள்ளன. Read more