Header image alt text

14.05.1998இல் வவுனியா கோவில்குளம் தாக்குநலில் மரணித்த தோழர் கார்த்திக் (மாசிலாமணி ஜீவதாஸ்) அவர்களின் 26ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று….

புதிய அரசியல் கூட்டமைப்பை ஆரம்பிப்பது தொடர்பான தீர்மானமிக்க கலந்துரையாடல் மெதிவெல பகுதியிலுள்ள ஹோட்டலொன்றில் இன்று முற்பகல் நடைபெற்றது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நிமல் சிறிபால டி சில்வா தரப்பினருக்கும் நிமல் லன்சா தலைமையிலான புதிய கூட்டணியின் தலைவர்களுக்கும் இடையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இரண்டு தரப்புகளையும் சேர்ந்த 20 பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்றைய கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர். Read more

கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் வௌியாகுவதற்கு முன்னதாக உயர்தரத்திற்கான வகுப்புகளை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. கல்வி அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைவாக அமைச்சரவை இந்த அனுமதியை வழங்கியுள்ளது. தற்போது கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிவரும் மாணவர்களுக்கான உயர்தர வகுப்புகளை எதிர்வரும் 5ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. Read more

திருகோணமலை – சம்பூரில் கஞ்சி பரிமாறிய நால்வர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் இலங்கை இளம் ஊடகவியலாளர் சங்கத்தினர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளனர். சம்பூர் கைது தொடர்பில் இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் தரிந்து ஜயவர்தன, இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் L.T.B.தெஹிதெனியவிற்கு கடிதம் அனுப்பியுள்ளார். Read more

2024ம் ஆண்டிற்கான சிறுபோகத்தின் போது, நெடுங்கண்டல் விவசாயிகளுக்கு அரச அதிகாரிகளால் திட்டமிட்ட வகையில் ஏற்படுத்தப்பட்டிருந்த பாரபட்சமான நடவடிக்கை தொடர்பாக 13.05.2024 அன்று, மன்னார் கச்சேரி நுழைவாயில் முன்பாக நெடுங்கண்டல் விவசாயிகளால் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. பல சுற்று பேச்சுவார்த்தைகளின் பின்னரும் மன்னார் மாவட்ட செயளாளரினால் தீர்வு வழங்கப்பபடாததினால் விவசாயிகளால் மேற்படி ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டது.

Read more