இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் (Julie Chung) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். யாழ். மானிப்பாயில் அமைந்துள்ள கிரீன் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு விஜயம் செய்த இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், வைத்தியசாலை செயற்பாடுகளை பார்வையிட்டார். இதன்போது, வைத்தியசாலை ஊழியர்களுடனும் கலந்துரையாடலில் ஈடுபட்டார். விஜயத்தில் யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட பீடாதிபதி பேராசிரியர் R.சுரேந்திரகுமாரன், தென்னிந்திய திருச்சபையின் யாழ். மறைமாவட்ட ஆயர் வி.பத்மதயாளன், வைத்தியர்கள், ஊழியர்கள், அமெரிக்க தூதரக அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர். Read more
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(புளொட்) கீழ் இயங்கும் முல்லைத்தீவு பள்ளவெளி கிராமத்தைச் சேர்ந்த கஸ்தூரி மகளிர் அமைப்புக்கும், வற்றாப்பளைக் கிராமத்தைச் சேர்ந்த குயிலினி மகளிர் அமைப்புக்கும் தலா 25,000/- ரூபா வீதம் மொத்தம் 50,000/- ரூபா நிதி சுழற்சி முறை கடன் திட்ட மூலதன உதவியாக இன்று (15.05.2014) வழங்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்கவின் கடமைகளுக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம் என கோரி தாக்கல் செய்த மனுவுக்கு எதிராக கட்சியின் தவிசாளர் விஜயதாச ராஜபக்ஸ தாக்கல் செய்த ஆட்சேபனை, கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை இன்று பகல் 1 மணிக்கு ஆராய்வதாக நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது. மனுவின் பிரதிவாதியான நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஸவின் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா நேற்று அடிப்படை ஆட்சேபனையை தாக்கல் செய்ததுடன், நீதிமன்றம் அந்த ஆட்சேபைனையை நிராகரித்தது.
ரஷ்ய – உக்ரைன் மோதலில் இலங்கையின் ஓய்வு பெற்ற 16 இராணுவத்தினர் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது ரஷ்யா மற்றும் உக்ரைனில் உள்ள ஓய்வு பெற்ற இராணுவத்தினரை வௌிவிவகார அமைச்சின் தலையீட்டுடன் நாட்டிற்கு அழைத்துவருவதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார். ரஷ்ய – உக்ரைன் யுத்தத்திற்கு ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களை அனுப்பிவைக்கும் ஆட்கடத்தல் தொடர்பில் இதுவரை 287 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் கூறினார்.
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பை இன்று முதல் மேலும் வலுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்காமையே இதற்கான காரணமாகும். அதற்கிணங்க, பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு 14ஆவது நாளாக இன்று முன்னெடுக்கப்படுகின்றது.