நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்படுவதை தடுக்கும் தடை உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது. குறித்த மனுவை நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தாக்கல் செய்திருந்தார். ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ நியமிக்கப்பட்டமை சட்டவிரோதமானது என அறிவிக்குமாறு கோரி குறித்த மனுவில் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
எவ்வாறாயினும் குறித்த நியமனத்துக்கு இடையூறு செய்வதை தடுக்கும் வகையில் கடுவலை மாவட்ட நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளதால் மனுதாரர் கோரிய தடை உத்தரவை பிறப்பிக்க முடியாது என விஜயதாச ராஜபக்ஷவின் சட்டத்தரணிகள் நேற்று ஆட்சேபனை தெரிவித்திருந்தனர்.
இந்தநிலையில் இது தொடர்பான தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்ட நிலையில் குறித்த மனுவை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நிராகரித்துள்ளது.