இவ்வருடத்தில் மூன்று மாதங்களில் 49 கைதிகள் சிறைச்சாலைகளில் இருந்து தப்பியோடியுள்ளனர். தப்பியோடியவர்களில் இருவர் மாத்திரமே இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளரும் ஊடகப்பேச்சாளருமான காமினி பி.திசாநாயக்க தெரிவித்தார். தப்பியோடியவர்களை கைது செய்யும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். இதேவேளை, வீரவில திறந்தவௌி சிறைச்சாலை முகாமிலிருந்து நேற்றிரவு கைதி ஒருவர் தப்பியோடியுள்ளார்.
எப்பாவெல பகுதியை சேர்ந்த 34 வயதான கைதி ஒருவரே தப்பிச்சென்றுள்ளார்.
பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் குறித்த கைதிக்கு அநுராதபுரம் நீதிமன்றத்தினால் தண்டனை வழங்கப்பட்டிருந்தது.