பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்புப் போராட்டம் 16ஆவது நாளாக இன்றும் தொடர்கிறது. பல்கலைக்கழக தொழிற்சங்க ஒன்றிணைந்த குழுவின் இணைத் தலைவர் தம்மிக எஸ்.பிரியந்த இதனைத் தெரிவித்துள்ளார். வேதன பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்புறக்கணிப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பணிப்புறக்கணிப்பு காரணமாக புதிய மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான செயற்பாடு தாமதமடைவதாக பல்கலைக்கழக தொழிற்சங்க ஒன்றிணைந்த குழுவின் இணைத் தலைவர் தம்மிக எஸ்.பிரியந்த தெரிவித்துள்ளார்.