அமரர் வைத்திலிங்கம் விஜயநாதன் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் சமுக மேம்பாட்டுப்பிரிவின் ஒழுங்கமைப்பில் மட்டக்களப்பு சுயதொழில் முயற்சிக்கான வாழ்வாதார உதவிகள் (19-05-2024 ) இன்று நாவற்குடாவில் வழங்கிவைக்கப்பட்டது. ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் சுவிஸ் உறுப்பினர் திரு. விஜயநாதன் ரட்ணகுமார் அவர்கள் தனது தந்தையாரான இளைப்பாறிய இலங்கை நீதிமன்ற முதலியார் அமரர் வைத்திலிங்கம் விஜயநாதன் அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு வழங்கிய நிதியில் இரண்டாவது செயற்பாடாக இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு சேற்றுக்குடாவைச் சேர்ந்த க.சுந்தரலிங்கம் மற்றும் மாவடிவேம்பைச் சேர்ந்த சீ.சங்கரப்பிள்ளை ஆகியோருக்கு தலா 30,000/ ரூபா வீதம் மொத்தம் 60,000/- ரூபா நிதி சுய தொழில் முயற்சியாக கோழிவளர்ப்பில் ஈடுபடுவதற்காக கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ம.நிஸ்கானந்தராஜா தலைமையில் கட்சியின் சமுக மேம்பாட்டுப் பிரிவின் பொறுப்பாளர் ந.ராகவன், கட்சியின் மாவட்ட செயலாளர் கா.கமலநாதன் ஆகியோர் முன்னிலையில் வழங்கிவைக்கப்பட்டது.
